Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே….! “ஹேக்கர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க இத மட்டும் செய்யுங்க”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு பிஎஃப் பணத்தை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

யாரேனும் உங்களது பான் கார்டு, UAN எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஓடிபி உள்ளிட்ட விவரங்களை மொபைல் போன் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ, சமூக வலைதளங்களின் மூலமாக கேட்டால் அதை பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களிடம் போன் கால் மூலமாக, எஸ்எம்எஸ் மூலமாக எந்த விவரங்களையும் கேட்பதில்லை. வாட்ஸ்அப் மூலமாகவும் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய அனுப்புமாறு சில மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே பிஎஃப் நிறுவனமானது ஊழியர்கள் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது இல்லை.  இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பணியாளர்கள் அந்த அழைப்பை துண்டித்து சுதாகரித்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |