Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி பணம் வந்துருச்சு…. உடனே உங்க அக்கவுண்ட்ட செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!!

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக வைத்திருக்க பிஎஃப் அமைப்பு முடிவு செய்திருந்தது. அதன்படி அந்த வட்டிப் பணம் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் வட்டி பணத்தை பெற வாடிக்கையாளர்கள் 10 மாதங்கள் வரை காத்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டி பணம் விரைவாக கிடைப்பதே பிஎஃப் சந்தாதாரர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஎஃப் சந்தாதாரர்கள் இன் கணக்கில் பிஎஃப் வட்டி பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை நடப்பு நிதியாண்டிற்கான 8.5சதவீத வட்டி பணம் சுமார் 23.59 கோடி பேருக்கு கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலருக்கு பணம் வந்தது தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்று எளிதாக சரி பார்க்கலாம். வீட்டில் இருந்து கொண்டே இதனை நீங்கள் செய்து முடிக்கலாம்.

அதற்கு பிஎஃப் கணக்கு உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். பேலன்ஸ் குறித்த அனைத்து விவரங்களும் உங்களுக்கு வந்து சேரும். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதனைப் போலவே SMS மூலமும் நீங்கள் பேலன்ஸ் பார்க்கலாம். பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில் ENG என்பது ஆங்கில மொழி. மற்ற மொழிகளில் கூட நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும். இதனை தவிர உமாங் ஆப் மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் பார்க்கலாம்.

Categories

Tech |