Categories
தேசிய செய்திகள்

பிஎப் பணம் எடுக்கணுமா?…. இதை உடனே பண்ணுங்க…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கணக்கிலுள்ள தனிநபர் விவரங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்கு பிஎப் நம்பரானது (UAN) ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாகவே பிறந்த தேதி, வயது ஆகிய விபரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம்.

இதற்கு சில ஆவணங்கள் கட்டாயம்:

# பள்ளி, கல்விச் சான்றிதழ்

# பிறப்புச் சான்றிதழ்

# பாஸ்போர்ட்

# அரசு துறை சான்றிதழ்கள்

#டிரைவிங் லைசன்ஸ்

# ESIC அட்டை

# மெடிக்கல் சர்டிபிகேட்

# பிறந்த தேதியை ஆன்லைன் வாயிலாக மாற்றுவதற்கு முதலில் பிஎப் வெப்சைட்டை ஓப்பன் செய்ய வேண்டும். https://www.epfindia.gov.in

#இந்த வெப்சைட்டில் யூசர் ஐடி, பாஸ்வர்டு, கேப்ட்சா குறியீடு போன்றவற்றை லாகின் செய்ய வேண்டும்.

# டிராப் டவுன் மெனுவில் ‘manage’ ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்

# புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் ஆதார், பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும்

# இதில் மாற்றங்களைச் செய்து அப்டேட் செய்ய வேண்டும்.

# அதன்பின் அப்டேட் செய்வதற்கான கோரிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பப்படும். அங்கு ஒப்புதல் கிடைத்ததும் அப்டேட் ஆகிவிடும்.

# பிஎப் கணக்கிலுள்ள தனிநபர் விபரங்கள் சரியாக இருப்பது அவசியம் ஆகும். இல்லையெனில் பிஎப் பணம் எடுப்பதில் கோளாறு ஏற்படலாம்.

Categories

Tech |