Categories
தேசிய செய்திகள்

பிஎப்.7 வைரஸ் பற்றி வாட்ஸ்அப்-ல் வரும் செய்தி…. யாரும் நம்பாதீங்க!…. சுகாதாரத்துறை முக்கிய தகவல்….!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. உருமாறிய தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரியை பரிசோதனை செய்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தவிர்த்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சூழலில் புது வகை கொரோனா பிஎப்.7 வைரஸ் பற்றிய ஒரு செய்தி வாட்ஸ்அப்-ல் வைரலாகி இருக்கிறது. அவற்றில் பிஎப்.7 வைரஸ் மிகவும் தீவிரமானது எனவும் டெல்டா வேரியன்டை விட 5 மடங்கு அதிக வீரியம்மிக்கது மற்றும் அதிக இறப்பு விகிதத்தை அதிகம் கொண்டுள்ளது எனவும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப்-ல் குறிப்பிடப்பட்டுள்ள அச்செய்தி போலி எனவும் அதை யாரும் நம்ப வேண்டாம் மற்றும் பகிரவேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |