மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. 10-ஆவது தவணைப் பணம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் pm-kisan திட்டத்தின் கீழ் நிறைய பேருக்கு பணம் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது. பயனாளிகளின் பெயர், வங்கி கணக்கு விவரம், ஆதார், மொபைல் நம்பர் போன்ற தகவல்களை தவறாக வழங்கியிருந்தால் நிதியுதவி சரியாக வந்து சேராது. இத்திட்டத்துக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படும். Pm-kisan திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சில விதிமுறைகள் இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிதி உதவி கிடைக்கும். அதாவது கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே நிதியுதவி பெற முடியும். pm-kisan திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் ஒரு மைனர் குழந்தை ஆகியோர் மட்டுமே அதே போன்று ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வைத்துள்ள மொத்த நிலத்தின் கையிருப்பு 12,000 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும். நிறுவன விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் மூலவர் குடும்பங்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் பொறியாளர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வு ஊதியம் பெறுவார்கள் என்றால்? இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியாது.