Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2,000 வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019ஆம் வருடத்தில் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு பல பேரும் பயன்பெற்று வரும் நிலையில், சில விவசாயிகள் இந்த பிஎம் கிசான் திட்டத்திற்கு தகுதிபெறாமல் இருக்கின்றனர். சென்ற அக்..17ம் தேதி அன்று பிஎம் கிசான் சம்மன்நிதியின் 12வது தவணையை பிரதமர் வெளியிட்டார். இந்த திட்டத்தின் வாயிலாக நிதி உதவி பெற தகுதியான விவசாயிகளில் சில பேருக்கும் இந்த 12-வது தவணையான ரூபாய்.2000 கணக்கில் வரவுவைக்கப்படாமல் உள்ளதாக சில செய்திகள் கூறுகிறது.

அப்படி கணக்கில் ரூபாய்.2000 தொகையை பெறாத விவசாயிகள் அது தொடர்பான புகாரை PM Kisan Helpdeskல் பதிவுசெய்யலாம். இத்தளத்தில் நீங்கள் வேலை நாட்களான திங்கள் -வெள்ளி வரை புகாரை பதிவுசெய்து கொள்ளலாம். அத்துடன் சில தகவல்களின் அடிப்படையில் இந்த திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் 12-வது தவணை தொகையானது விவசாயிகளின் கணக்கில் நவம்பர் 30ஆம் தேதி வரை வரவுவைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரையிலும் பணம் பெறாத விவசாயிகள் அந்த தேதி வரையிலும் காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகும் பணம் கணக்கில் வரவில்லை எனில் புகார் தெரிவிக்கலாம். இகேஒய்சி, தகுதி, நிலவிதைப்பு ஆகிய சில காரணங்களாலும் உங்கள் தவணைத்தொகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே உங்களது புகாரை பதிவுசெய்வதற்கு [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம் (அ)011-24300606 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம். அதுமட்டுமின்றி பின்வரும் தொலைபேசி எண்களுக்கும் டயல் செய்து புகார்களை தெரிவிக்கலாம்.

# பிஎம் கிசான் கட்டணம் இல்லா எண்- 18001155266

# பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண்- 155261

# பிஎம் கிசான் லேண்ட்லைன் எண்கள்- 011-23381092, 23382401

# பிஎம் கிசானின் புது ஹெல்ப்லைன்- 011-24300606

# பிஎம் கிசானின் மற்றொரு ஹெல்ப்லைன்- 0120-6025109

Categories

Tech |