Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளே பணத்தை திருப்பிக் கொடுங்க?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6000 ரூ நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூ என ஒரு வருடத்தில் மட்டும் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் 10ஆவது தவணைப்பணம் அண்மையில் ஜன-1ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அன்றைய நாள் இந்த நிதியுதவியை வழங்கினார்.

ஆனால் இவற்றில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நிதியுதவி பெற்ற விவசாயிகளில் 7 லட்சம் பேர் அந்தப் பணத்தை திருப்பி வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவியைப் பெற சில விதிமுறைகள் இருக்கின்றன. விவசாயிகள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோன்று வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது.

இதனிடையில் 10வது தவணைப்பணம் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ20,000 கோடியைச் செலவு செய்துள்ளது. ஆனால் இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளில் சுமார் 7 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இந்த திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்று தெரியவந்து இருக்கிறது. ஆகவே அவர்கள் உடனே தங்களது நிதியுதவியைத் திருப்பி வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |