நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர்.
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் கடந்த மே 31-ஆம் தேதி 11-வது தவணை பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது. 10 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக 21 ஆயிரம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 11 ஆவது தவணைப் பணம் இன்னும் நிறைய விவசாயிகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்களின் பிஎம் கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் ஒருவேளை பணம் கிடைக்காமல் போகலாம்.
அதாவது பெயர், வங்கி கணக்கு மற்றும் ஆதார் போன்ற விவரங்கள் அனைத்தும் சரியாக அப்டேட்டில் இருக்க வேண்டும். அதில் ஏதாவது தவறு இருந்தால் பணம் வருவதில் சிக்கலாகிவிடும். அதனை விவசாயிகளே pm-kisan இணையதளத்தில் சென்று சரிசெய்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுடைய விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பது பற்றி இதில் பார்க்கலாம்.
Pm-kisan இணையதளத்தில் பணம் கிடைக்காத விவசாயிகள் இந்த எண்களில் புகார் செய்யலாம்.
011-24300606.
18001155266
155261
011-23381092, 23382401
011-24300606
0120-6025109
மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.