இந்தியாவில் விவசாயிகள் பயனடையும் விதமாக வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 2018ம் வருடம் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ 2,000 வீதம் வருடந்தோறும் 3 கட்டமாக மொத்தம் ரூ 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது நேரடியாகவே மத்திய அரசு மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சமீபத்தில் கிசான் திட்டத்தின் 12வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவற்றில் சிலருக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேட்டபோது வங்கிக்கணக்கில் இகேஒய்சி செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராதென கூறுகின்றனர். இதன் காரணமாக பிஎம் கிசான் இணையத்தில் உங்களின் கிசான் தொகை பற்றிய நிலவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
இதனிடையில் தகுதியிருந்தும் கூட பணம் கிடைக்க பெறாதோர் [email protected] எனும் மின் அஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பணம் வழங்கும் பணியானது 1 மாதத்திற்கு நடைபெறும். ஆகவே கவலைக்கொள்ள தேவையில்லை. வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் தகுதியிருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் தவணைப்பணமானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.