நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது. அதாவது விவசாயிகள் ஆதார் வாயிலான கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடிக்க வேண்டும். கேஒய்சி என்பதை வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். பொதுவாக இந்த நடைமுறையை வங்கிகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன.
எனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் நிதி உதவி பெறுவதற்கு சரிபார்ப்பு மிகவும் அவசியம். 11-வது தவணைத் தொகை கடந்த மேல் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் பயனாளிகள் தங்களுக்கு கிடைத்துள்ள பண வரவுகளை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் இந்த இணையதளத்தில் புதிய அறிவிப்புகள் குறித்தும் விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது பன்னெண்டாவது தவணைத் தொகை வழங்குவது தொடர்பான பணிகள் நடைபெற்ற வருகிறது.இந்நிலையில் இந்த உதவி தொகையை பெற பயனாளிகள் அனைவரும் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 155261 / 011-24300606 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை கேட்டறிந்து கொள்ளலாம்.