Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதிதிட்டத்தின் வாயிலாக இந்தியாவிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதி உதவி பணம் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் 12-வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஒரே குடும்பத்திலுள்ள கணவன்-மனைவி இருவருமே நிதியுதவி பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்த நிலையில், தகுதியற்றவர்களுக்கு வழங்கிய நிதியுதவி திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதுவரைக்கும் 21 லட்சம் விவசாயிகள் இந்த நிதியுதவி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் உடனடியாக இதுவரைக்கும் அந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி பணம் திரும்பப் பெறப்படும் என்றும் 12-வது தவணைக்கான நிதியுதவி இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் pm-kisan போரட்டலில் நிலபதிவுகள் மற்றும் ஆன்சைட் சரிபார்ப்பு பணிகள் பதிவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |