Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. இது இவர்களுக்கு கிடையாது…. அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பி எம் கிசான் திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகள் நிதி உதவி பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அது மட்டுமல்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி என இருவரும் திட்டத்தை நிதி உதவி பெற்று வருவதாகவும் அதனால் தகுதியற்றவர்களுக்கு வழங்கிய நிதி உதவி திரும்ப பெறப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதுவரை 21 லட்சம் விவசாயிகள் நிதி உதவி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என அரசு தேர்ந்தெடுத்துள்ளது.அதனால் உடனடியாக இதுவரைக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி பணம் திரும்ப பெறப்படும் என்றும் பன்னிரண்டாவது தவணைக்கான நிதி உதவி பணம் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |