pm கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தகுதியற்ற நிலையில் பணம் பெறுபவர்கள் திருப்பி ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நிதியுதவி பெற அனுமதிக்கப்படுகிறார்.
அதாவது கணவன் அல்லது மனைவி மட்டுமே பணத்தை பெற முடியும் ஒருவேளை இரண்டு பேரும் பெறுகிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். உங்களில் ஒருவர் பணத்தை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டியிருக்கும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைய கூடிய குடும்பங்களை அடையாளம் காணும் செயல் முறை ஏற்கனவே பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி இல்லாவிட்டாலும் 42 லட்சம் பேர் பணம் பெறுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக2.990 கோடி மத்திய அரசு செலவு செய்யப்படுகிறது. இதில் தகுதியற்ற விவியசாயிகளின் பட்டியலை ஏற்கனவே வேளாண் துறையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தத் தகுதி இல்லாமல் நீங்கள் பணம் பெறுகிறீர்கள் என்றால் அதனை உடனடியாக வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.