Categories
தேசிய செய்திகள்

பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்…. யாரும் இத நம்பாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்குவதாகவும் காப்பீட்டுத் தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அது போலியானது என்று அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. இப்படி வரும் கடிதங்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |