தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ஐ போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆனால் இது போன்ற பலன்கள் மற்றும் செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றி ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதன்படி இந்த திட்டத்தை அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மற்றும் இதன் விலை 200க்கும் குறைவாக கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக காண்போம். 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வருகின்றது. அதாவது அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிஹான் லிமிடெட் 197 ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இது குறைந்த விலையில் பல நன்மைகளை வழங்குகிறது.
அது மட்டுமில்லாமல் அது ஜியோ, ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியாக இருந்தாலும் இது போன்ற மலிவான ரீசார்ஜ் திட்டத்தை யாரும் வழங்குவதில்லை. இந்த 197 ரூபாய் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 100 நாட்கள் ஆகும். 100 நாட்களுக்கு இந்த திட்டத்தில் பயனருக்கு அன்லிமிடெட் டேட்டா உடன் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இணையத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க படாது. ஆனால் வேகம் 40 கே பி பிஎஸ் ஆக குறைக்கப்படும் மேலும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளுடன் வருகிறது. ஆனால் முதல் 18 நாட்களுக்கு மட்டுமே இதை பெற முடிகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் ஜீன்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்துடன் வேலிடிட்டி நிறைவு பெறும் வரை இன்கமிங் அழைப்புகள் இலவசம் தான் என்ற போதும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு பயனர்கள் தனி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் முறை இலவச எஸ் எம் எஸ் பலன் மட்டும் வழங்கப்படுகிறது. இத்தகைய பலன்களுடன் டெலிகாம் சந்தையில் கிடைக்கும் ஒரே திட்டமாக பிஎஸ்என்எல் 197 ரூபாய் இருக்கிறது.