Categories
டெக்னாலஜி பல்சுவை

பிஎஸ்என்எல்-லின் சூப்பரான ஆஃபர்… இலவச சிம்… இன்றே கடைசி நாள்… விரைவில் முந்துங்கள்…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை 31 தான் கடைசி தேதி விரைவில் முந்துங்கள்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது சிறப்பான சலுகைகளை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன் சலுகையில் ரூபாய் 45 க்கு ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த புதிய சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஜூலை 31 வரை இலவச சிம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |