நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது 1.35 லட்சம் பிஎஸ்என்எல் டவர்கள் 5g மாற்றப்படும். 5g சோதனைக்காக டிசிஎஸ் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் செய்து கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.