பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி 3 சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.299, ரூ.399, ரூ.555 ஆகிய திட்டங்கள் பயனாளர்களுக்கு மார்ச் 1 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதில் ரூ.299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10 mbps வேகத்தில் வழங்கப்படுகின்றது. 100 ஜிபி டேட்டா முடிந்தவுடன் டேட்டா வேகம் 2mbps ஆக குறையும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை உள்ளது. இது ஆறு மாதங்களுக்கு கிடைக்கும்.
அதன் பிறகு அவர்களை 399 ரூபாய் டிஎஸ்எல் திட்டத்திற்கு நிறுவனம் மாற்றும். இதனையடுத்து 399 ரூபாய் சலுகையில் 200 ஜிபி டேட்டா, 10mbps வேகத்தில் வழங்கப்படுகின்றது. இதிலும் அனைத்து சேவைகளும் உள்ளன. இதனையடுத்து 555 ரூபாய் பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10 mbps வேகத்தில் வழங்கப்படுகின்றது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை உள்ளது. இது குறைந்த வேகம் இருந்தாலும் மலிவான விலையில் பிஎஸ்என்எல் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.