சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், குடிசைமாற்று குடியிருப்புகளை கட்டிக் கொடுத்த பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். விஜயதசமியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், குடும்பத்தோடு வழிபாடு செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் குடியமர்த்தபடுவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதிப்பது குறித்து விரைவில் முதல்வர் முக. ஸ்டாலின் உத்தரவு பிறப்பார் என்றும் கூறியுள்ளார்.