ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் வசிப்பவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் இவர் தனது விவசாய நிலத்தில் யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு யோசனை செய்துள்ளார்.
அதன்படி பிகினியுடன் சன்னி லியோன் இருக்கும் ஆளுயர பேனர் ஒன்றை தன்னுடைய வயக்காட்டில் வைத்துள்ளார். இதனால் அவருடைய நிலத்தைக் கடந்து செல்பவர்கள் பார்வையெல்லாம் நிலத்தின்மீது இல்லாமல் சன்னி லியோன் மீது உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.