Categories
தேசிய செய்திகள்

பிகினி உடையில் பேராசிரியை…. செல்போனில் உற்று பார்த்த மாணவன்…. அதிர்ந்துபோன தந்தை…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரிலுள்ள செயிண்ட் சேவியர் பல்கலைகழகத்தில் பயின்று வரும் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தன் மொபைல் போனில் உற்று பார்த்தபடி இருந்துள்ளார். இதை அவரது தந்தை கவனித்து இருக்கிறார். இதற்கிடையில் அதிகநேரம் மொபைல் போனையே உற்றுபார்த்த மகனின் அருகில் சென்ற தந்தை அதிலிருந்த காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனார். அதாவது சமூகஊடகத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படம் ஒன்றை அவரது மகன் பார்த்தபடி இருந்துள்ளார். அதன்பின் விசாரித்ததில் அது மாணவரின் பேராசிரியை ஒருவரது புகைப்படம் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் பல்கலைகழகத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒரு புகார் கடிதம் அளித்துள்ளார். அவற்றில், பல்கலைக்கழக பேராசிரியை ஒருவரின் ஆபாசம் நிறைந்த நிர்வாணத்தின் உச்சம் தொடும் வகையிலான புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த தன் மகனை கையும் களவுமாகக பிடித்தேன்.

அந்த பேராசிரியை பாலியல் ரீதியாக தூண்டும் அடிப்படையில் உள்நோக்குடன் பொது வெளியில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆசிரியை ஒருவர் உள்ளாடை அணிந்த படி சமூகஊடகத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை பார்க்கும் போது ஒரு பெற்றோராக, முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற அருவருப்பான விசயங்களிலிருந்து என் மகனை பாதுகாக்க நான் முயன்றேன். எனினும் ஒரு பொது தளத்தில் பிகினி போன்ற ஆடையில் தன் உடலை வெளிக்காட்டும் பேராசிரியையின் புகைப்படங்களை 18 வயது மாணவர் பார்க்க நேரிடுவது ஆபாசம் நிறைந்தது, முறையற்றது என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பல்கலைகழகத்தின் துணை வேந்தர் மற்றும் பிற அதிகாரிகள் நடத்திய கூட்டத்திற்கு பேராசிரியை வரவழைக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் அந்த கடிதம் மற்றும் பேராசிரியையின் இன்ஸ்டாகிராமிலிருந்த சில புகைப்படங்களை அளித்துள்ளனர். அதனை வாங்கிய அவர், இப்புகைப்படங்கள் எவ்வாறு பெறப்பட்டன என தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் அந்த புகைப்படங்களைத் தான் மாணவர் பார்த்து கொண்டிருக்கும் போது தந்தையால் பிடிபட்டாரா..? என்பன போன்ற தகவல்களை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பேராசிரியை கூறியுள்ளார். பின் பல்கலை கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறேன் எனக்கூறி என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர் என பேராசிரியை புகாராக கூறியுள்ளார்.

இருப்பினும் அந்த உதவி பேராசிரியை அவராகவே விரும்பி விலகியுள்ளார் என பல்கலைகழகத்தின் தரப்பில் அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்செய்யப்பட்டு இருக்ககூடும் எனவும் புகைப்படங்கள் அதன் வழியே கசிந்து, பரவி இருக்ககூடும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை பல்கலைக்கழகம் நீக்கிய விதம் பாலியல் துன்புறுத்தலுக்கு நிகரானது மற்றும் தன் நன்னடத்தையை அழிக்கும் உள் நோக்கம் கொண்டது எனவும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Categories

Tech |