நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது..
நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் முகாந்திரம் இருந்தால் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.