Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்பு?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது . இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Simbu (aka) STR photos stills & images

தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார் . மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Categories

Tech |