Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ பட நடிகையுடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்… அசத்தலான போஸ்டர் இதோ…!!!

பிகில் பட நடிகையுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மியூசிக் வீடியோ ஆல்பத்தில் நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இந்த நிகழ்ச்சியில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிவாங்கி மற்றும் அஸ்வின் இருவரும் இந்த நிகழ்ச்சியில் செய்யும் க்யூட் ரகளைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து மியூசிக்கல் வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘குட்டி பட்டாஸ்’ என்ற இந்த ஆல்பத்தின் போஸ்டர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அ.ப. ராஜா எழுதியுள்ள இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார் . வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த மியூசிக்கல் வீடியோ பாடலை சோனி மியூசிக் வெளியிடுகிறது.

Categories

Tech |