Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ ராயப்பன் கெட்டப்பில் கலக்கும் பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிகில் படத்தில் வரும் ராயப்பன் கெட்டப்பில் நடிகர் மயில்சாமி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகர் மயில்சாமி பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அரசியல் நிகழ்வு குறித்து தொடர்ச்சியாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

மயில்சாமி

இந்நிலையில் நடிகர் மயில்சாமி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் ராயப்பன் கெட்டப்பில் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

Categories

Tech |