Categories
மாநில செய்திகள்

“பிகே முத்தையா தேவர்” இன்று நினைவு நாளா, இல்ல பிறந்தநாளா….?‌ திண்டுக்கல் சீனிவாசன் செம கன்ஃபியூஷன்….!!!!

தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக இருந்த முத்தையா தேவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருடைய 43-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முத்தையா தேவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக கட்சியின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஜக்கையன், பெரிய புள்ளான், சத்ரியன், தவசி, யோகிராஜன் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதாவது எங்கள் அன்பு மாமா பிகே முத்தையா தேவர் அவர்களின் 100-வது நினைவு நாள் என பேசத் தொடங்கினார். அப்போது செல்லூர் ராஜு உட்பட தொண்டர்கள் உடனடியாக திண்டுக்கல் சீனிவாசனை நிறுத்த சொல்லி 100-வது பிறந்தநாள் என்றும், 43-ஆம் ஆண்டு நினைவு நாள் என்றும் கூறுங்கள் என்றனர். இதனையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் ஐயா முத்துராமலிங்க தேவரின் வாரிசான பிகே முத்தையா தேவரின் 100-வது பிறந்தநாள் மற்றும் 43-வது நினைவு நாளுக்கு அண்ணன் எடப்பாடி உத்தரவின் பேரில் அதிமுக கட்சியின் சார்பில் நாங்கள் மரியாதை செலுத்தியுள்ளோம் என்றார். தேவர் சிலை அமைக்கவும், அதற்கு மணிமண்டபம் கட்டவும், 58 கால்வாய் திட்டத்தில் மராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கியதும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காலத்தில் தான்.

நாங்கள் முத்துராமலிங்க தேவரின் மீது எந்த அளவுக்கு அன்பும், மரியாதையும் வைத்திருக் கின்றோமோ அதேப்போன்று அவரின் சீடரான முத்தையா தேவரின் மீதும் அளவு கடந்த அன்பும், மரியாதையும், பற்றும் வைத்திருக்கிறோம். அவருடைய புகழ் உயர அதிமுகவின் சார்பில் எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்வோம் என்றார். மேலும் அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மக்களுக்கு தெரிந்த விஷயங்களை எத்தனை முறை கேட்பீர்கள். நினைவு தினம் அதை பற்றி மட்டும் பேசுவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Categories

Tech |