IDBI வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டதிற்கான வட்டி, விகிதங்களை மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வட்டி வீதம் 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும். இதன்படி, 7 நாட்கள் முதல் 20 வருடங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.7% முதல் 4.8% வரை வட்டி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7 முதல் 14 நாட்கள் – 2.7% வட்டி.
15 முதல் 30 நாட்கள் – 2.7% வட்டி.
31 முதல் 45 நாட்கள் – 2.8% வட்டி.
46 முதல் 90 நாட்கள் – 3% வட்டி.
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் – 3.5% வட்டி.
6 மாதம் முதல் 1 வருடம் – 4.3% வட்டி.
1 ஆண்டு முதல் 3 வருடங்கள்- 5.1% வட்டி.
ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் – 5.25%
10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் – 4.8%
இந்த வட்டி விகிதங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.05% கிடைக்கும்.