பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை கடுமையாக விளாசி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டது. அதில் போட்டியாளராக பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை அபிநயாஸ்ரீ கலந்து கொண்டார். ஆனால் அவர் இரண்டாவது வாரமே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறிய அவர் கோபமாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தன்னை நிகழ்ச்சியில் காட்டவே இல்லை. என்னுடைய அம்மா சேனலுக்கு போன் செய்து கேட்டாராம். நாமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் தான் சேப் ஜோனில் இருந்ததாகவும் ஆனால் சேனலுக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை எலிமினேட் செய்து விடுகின்றார்கள். ரசிகர்கள் ஓட்டு அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவதாக கூறுவது பொய். தமிழில் கமல் எல்லா போட்டியாளர்களிடம் பேசுகின்றார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை. வேண்டியவர்களிடம் மட்டுமே பேசுகின்றார்கள் என கூறியுள்ளார்.