Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் ‘மாட்னியா’ டாஸ்க் … அடுத்த வாரமும் ஆரி, கேபியை நாமினேட் செய்த ரம்யா … வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . அதில் பலரும் ஆரி, அனிதா மற்றும் சிவானி ஆகியோரின் பெயர்களை கூறு கின்றனர். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘மாட்னியா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாடும் இரண்டு போட்டியாளர்களில் ஒருவரின் கையை மற்றொருவர் குறிவைத்து அடிக்க வேண்டும் . இதில் வெற்றி பெற்றவர் கண்ணாடி குவளைக்குள் இருக்கும் சீட்டை எடுக்கலாம்.

அந்த சீட்டில் என்ன வார்த்தை உள்ளதோ அதற்கு ஏற்றவாறு தோல்வியடைந்த போட்டியாளரிடம் என்ன கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் . இதில் முதலில் வந்த ஆரி ரம்யாவை தோற்கடித்து சீட்டை எடுக்கிறார். பின் ரம்யாவிடம் ‘அடுத்த வாரம் இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்றால் யாரை நாமினேட் செய்வீர்கள் ?’என்று கேட்க அதற்கு பதிலளித்த ரம்யா ,’ஆரி மற்றும் கேபி’ என்று கூறுகிறார். இந்த வாரமும் இவர்களைத்தான் ரம்யா நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வந்த பாலா , ஆரியிடம் பைனல்ஸில் உங்க கூட யார் இருக்கணும்னு நினைக்கிறீங்க? என்று கேட்கிறார் இதற்கு ஆரி பதிலளிக்கும் முன் ரியோ எழுந்து, ‘பிக்பாஸ் அய்யா இவர்தான் உண்மையான நரி’ என்று கூறுவதுபோல் புரோமோ நிறைவடைகிறது.

Categories

Tech |