பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று பிக்பாஸிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் உண்டா ?அல்லது ஒருவர் மட்டும் வெளியேறுவாரா? என்பது விரைவில் தெரியவரும் .
இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அர்ச்சனா, சோம், ஆஜித், ஆரி, ஷிவானி, அனிதா மற்றும் ரியோ ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த வாரம் வெளியேறப்போவது ஆஜித் அல்லது அர்ச்சனா தான் என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் தான் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் உண்மையில் யார்? வெளியேறப் போகிறார்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தான் தெரிய வரும் அதுவரை பொறுமையுடன் காத்திருப்போம்.