சின்ன பொண்ணு, அபினய், அபிஷேக் ஆகியோருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை. இருப்பினும் நமீதா மாரிமுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸிலிருந்து வெளியேறினார்.
இந்த வாரம் நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, அக்ஷரா, அபிஷேக், நதியா, சின்ன பொண்ணு, அபினய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் அபினய், அபிசேக், சின்ன பொண்ணு ஆகிய மூவருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் சின்ன பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.