Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து ராஜா வீட்டு கன்னுக்குட்டி ஜித்தன் ரமேஷ் வெளியேறினாரா ? … வலைத்தளங்களில் கசியும் தகவல்கள்…!!

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் முதலாவதாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்துள்ளது .

பிக்பாஸ்-4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக  இன்றைய முதல் புரோமோவில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா -அர்ச்சனா சண்டை குறித்து உரையாடினார். இதையடுத்து வெளியான மூன்றாவது புரோமோவில் நிஷா சுவாரசியம் குறைவான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் சோமை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷை கன்பெக்சன் ரூமுக்கும் அனுப்பி இருவரில் ஒருவர் இன்றே வெளியேறி இந்த மேடையில் என்னை சந்திப்பீர்கள் என கமல் கூறினார். இந்நிலையில் பிக்பாஸில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ் வெளியேற்றபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. இருப்பினும் இது உண்மையா? என்பது இன்றைய எபிசோடில்தான்  தெரியவரும் .

Categories

Tech |