பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.
சென்ற சில நாட்களாகவே ஜிபி முத்து டல்லாக இருந்த நிலையில் தனது மகனுக்கு உடம்பு சரியில்லை. தான் வீட்டிற்கு போக வேண்டும் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன்படி சென்றுவிட்டார். இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன் அதன் வருமானம், வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தனது மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாக்ஸ் சீசன் 6-லிருந்து விடைபெற்ற தமிழ் மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன் என பதிவிட்டுள்ளார்.