பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 -வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சம்யுக்தா என்ற போட்டியாளர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார்.
வெளியே வந்த சம்யுக்தா கமலிடம் உரையாடும்போது இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம்தான். இந்த வாரம் வெளியேறுவேன் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற சம்யுக்தா குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.