பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் கோபத்தை ஆக்ரோஷமாகவும் வெளிக்காட்டி விளைடாடி வந்தார்.
இவர் வெளியேறியபோது வீட்டிலிருந்த அனைவரும் கண் கலங்கினர் . இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தன் வீட்டுக்கு சென்ற அர்ச்சனா அவரது மகள் சாராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது . மேலும் சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மை பாஸி குமாரு இஸ் பேக் அண்ட் ஐ அம் லவ்வின் இட் , கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவிட்டு அந்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்ததோடு இணையத்தில் வைரலாகி வருகிறது .