மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமடைந்த மகேந்திரனிடம் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறீர்களா?’ எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மகேந்திரன் ‘வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தான்’ என கூறியுள்ளார்.