Categories
சினிமா

பிக்பாஸில் எலிமினேட் கார்டில் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்…. என்ன செய்தார் தெரியுமா?…. வைரல் வீடியோ…..!!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செரினா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியுள்ளார்.

கமல்ஹாசன் பலமுறை எச்சரித்தும் அதனை அவர் அப்படியே தொடர்ந்ததால் இன்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது கமல்ஹாசன் கார்டை காட்டி தான் அதனை அறிவித்தார்.ஆனால் அந்தக் காடு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. அதாவது தொடர்ந்து செரீனா மலையாளத்தில் பேசியதால்தான் எலினேட் ஆகிறார் என காட்டத்தான் கமல்ஹாசன் இப்படி செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் முன்பு இல்லாத வகையில் தற்போது போட்டியாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அது வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)

Categories

Tech |