ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரபலமான விஜய் தொலைக்காட்சி இதில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். அதைப்போல் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு உலகநாயகன் கமலஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இறுதியாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன்4 ரில் பிரபல நடிகர் ஆரி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தமிழைப் போன்றே அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் பிக்பாஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது . அதனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். எப்போதும் சண்டையிட்டும் , போட்டி போட்டுக்கொண்டும் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் முக்கியமான போட்டியாளரை அழைத்து செல்வது போல் போட்டியாளர் பாக்கியலட்சுமி அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரின் முன்னாள் கணவர் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைந்து தன் கணவரின் உடல்நிலை நீண்ட நாட்களாக சரி இல்லை தன் மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு தான் இங்கு வந்ததாகவும் கூறினார். அதன்பின் யோசித்த அவர் பிக்பாஸ் வீட்டில் தொடரப் போவதாக தெரிவித்தார்.