பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறவினர்கள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்று வெளியான முதல் புரோமோவில் கேபி அம்மாவும் ,இரண்டாவது புரோமோவில் ஆஜித் குடும்பமும் வருகை தந்தனர். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரியின் அழகிய குடும்பம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
#Day88 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/U8Q55Q42AU
— Vijay Television (@vijaytelevision) December 31, 2020
ஆரியின் குழந்தை தனக்கும் டாஸ்க் வேண்டும் எனக்கூற ‘கன்பெக்ஷன் அறைக்கு சென்று அம்மாவை அழைத்து வாருங்கள்’ என பிக் பாஸ் டாஸ்க் கொடுக்கிறார் . இதன் பின்னர் ஆரியுடன் பேசிய அவரது மனைவி ‘எனக்கு என்ன பிடிச்சதுன்னா நீங்க யாரையும் ஹர்ட் பண்ணவே இல்ல, நீங்க வீட்டில எப்படி இருக்கீங்கலோ அப்படியேதான் இங்கயும் இருக்கீங்க என்கிறார்.