Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்…. “கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்”…. யாருப்பா அது….!!!

விஜய் டிவியின் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை இனி கமலுக்கு பதிலாக பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாக்ஸ் நிகழ்ச்சி 2017ஆம் வருடம் தொடங்கியதிலிருந்தே இவர் தான் தொகுத்து வழங்குகின்றார். இவர் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகின்றார். தற்போது இவர் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு காரணமாக தன்னால் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கமல் கூறியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமல் படப்பிடிப்பு காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரே தவிர முழுவதுமாக விலகுவதாக அறிவிக்கவில்லை. ஆனால் கமல்ஹாசனோ தீவிரமாக அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இனி தொகுப்பாளராக பங்கேற்க மாட்டார் என பலர் கூறிவருகின்றனர். இதனால் விஜய் டிவியானது அடுத்த தொகுப்பாளரை தீவிரமாக தேடி வருகின்றது. இந்நிலையில் சென்ற வருடம் கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற செய்தி வைரலானது. பின்னர் அந்த தகவலானது பொய்த்தது. தற்போது இச்செய்தி உண்மையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற செய்தி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |