Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோ…”ஜூலி, பாலாஜியை கலாய்க்கும் சதீஷ்”… பேசமாட்டாருன்னு பார்த்தா சும்மா தெறிக்கவிற்ராரே…!!!

பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை கலாய்க்கும் சதிஷ்.

மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது என்றும் கூறலாம். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அனைத்து சீசன்களின் போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக கமல் தொகுப்பாளராக இருந்து விலகி தற்போது சிம்பு தொகுத்து வழங்குகின்றார்.

பிக்பாக்ஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அளவிற்கு ஓடிடியில் பாப்புலராகவில்லை. முந்தைய சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்களை தவிர்த்து கலக்கப்போவது யாரு சதீஷ் இந்நிகழ்ச்சியில் உள்ளார். இவர் கலக்கப்போவது யாரு, பட்டாஸ் உள்ளிட்டவற்றில் என்டர்டைமெண்டாக இருந்தார். ஆனால் இந்நிகழ்ச்சியில் அப்படி இல்லை. மிகவும் அமைதியாக இருக்கிறார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளியாகிய புரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை  சதிஷ் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 

Categories

Tech |