Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரியின் புதிய படம்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

பிக்பாஸ் ஆரியின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இவர் பிக் பாஸுக்கு முன் நெடுஞ்சாலையில் ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் வீட்டில் வெளியானது . இந்நிலையில் ஆரி நடித்துள்ள ‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ‌. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Categories

Tech |