Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 32வது நாட்களை நெருங்கி இருக்கிறது.

இந்த நிலையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் ராம் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக நூலிழையில் மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது உறுதியாக உள்ளது. நாமினேசன் லிஸ்டில் இவர்களைத் தவிர தனலட்சுமி. ஆயிஷா, ஏடிகே, விக்ரமன், அசீம் போன்றோர் இருந்தனர்.

Categories

Tech |