Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் காதலரா இவர்?… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர் .

கடந்த வாரம் ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் தஞ்சாவூரைச் சேர்ந்த ராப் பாடகி ஐக்கி பெர்ரி. இவர் ஒரு மருத்துவரும் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஐக்கி பெர்ரி தான் கமிட்டெட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐக்கி பெர்ரியின் காதலர் தேவ்-வின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |