பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின் . இவர் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் லாஸ்லியா என்ற போட்டியாளரை காதலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவின் ஸ்டைலிஷ் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.