பிக்பாஸ் பிரபலம் சக்தி கதாநாயகனாக நடித்துள்ள குற்றவாளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சக்திவேல் வாசு . இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் ஆவார். இதையடுத்து சக்தி தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் இவர் ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
Happy to launch this look of my bro Shakthi 😊 #Veekeyfilmfactory #Huzain_salah #Dinu_mohan #Saran_indokera #Vishnu_moorad #Shameer_Gibran #Riyasalif pic.twitter.com/gO9ZFDQ4OX
— Jayam Ravi (@actor_jayamravi) September 3, 2021
தற்போது இயக்குனர் ஹுஸைன் சாலா எழுதி இயக்கியுள்ள ‘குற்றவாளி’ படத்தில் சக்தி கதாநாயகனாக நடித்துள்ளார். வீகி பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தினு மோகன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.