Categories
சினிமா

பிக்பாஸ் சர்ச்சையால்…. பிரிய போகிறார்களா?…. பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவி….!!!!

பிக் பாஸ் 5 ல் கலந்துகொண்ட அபிநயும் அவருடைய மனைவி அபர்னாவும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் கலந்து கொண்டார். அபினைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.அவருடைய மனைவி பெயர் அபர்ணா வரதராஜன். இந்நிலையில் அபினய்க்கு பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளரான பவானி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவானி அபினயை பார்த்து “என்ன லவ் பண்றியா என்று கேட்டார். ” அதற்கு பதிலளித்த அபினய் “எனக்கும் ஃபீலிங் இருக்கு” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் அபினய் வீட்டில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இவருடைய மனைவி மனைவி அபர்ணா வரதராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபினயின் பெயரை நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அபர்னாவோ அபிநயோ எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |