பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சாண்டி மாஸ்டர். இவர் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் சாண்டி மாஸ்டருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கின் போது சாண்டி மாஸ்டரின் மனைவி மற்றும் குழந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் சாண்டி மாஸ்டரின் மகள் லாலாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தற்போது லாலா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.