Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் சீசன் 4″ சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் திடீரென தொகுப்பாளராக  சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தற்போது தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தெலுங்கில் 3 சீசன்கள் முடிவுற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் நான்காவது சீசன்தொடங்கப்பட்டது.  இந்த சீசனில் மூன்றாவது சீசனை போலவே நடிகர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சீசன் 1, 2 நிகழ்ச்சியை நானி, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் நடைபெறும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிபிற்க்காக நடிகர் நாகார்ஜுனா செல்ல வேண்டி உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து  சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்து இருக்கிறார். இதனால் நடிகை சமந்தா அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா படத்தில் சூர்யா நடிகை || Surya actress in Samantha film

இதன்படி நேற்று திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக  சர்ப்ரைஸ் எண் ட்ரி  கொடுத்த சமந்தாவுக்கு நடிகர் நாகார்ஜுனா வீடியோ கால் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களும் சமந்தாவை பார்த்தவுடனே ஆச்சரியத்தில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்துள்ளனர். ஆகவே சமந்தா தான் சில வாரங்களுக்கு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |