Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு… வைரலாகும் புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவுடன் ஒளிபரப்பு  தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் மகள் மிலா, பவானி ரெட்டி உள்பட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான ஒரு சில புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோவுடன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த கலக்கலான புதிய புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |